தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடைபாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இது தொடர்பாக பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் தான். […]
