புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைதியில் இருந்து சாதி, மத ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களை கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே […]
