நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட 313 பேர் MP-யாக பதவியேற்ற […]
