சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பகுதி எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 2017- ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் முழு […]
