தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனையுமான கரோலினா மரின் – தாய்லாந்தின் பார்ன்பாவே சொச்சுவாங்குடன் மோதினார். இதில், ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-11, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி […]
