வாலிபர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ராம்விலாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராம்விலாஸ் தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த பணம் அடிக்கடி காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரகசியமாக வீட்டில் இருப்பவர்களை கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் 13 வயதான தனது 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் பணத்தை எடுத்தது ராம் விலாஸுக்கு தெரிய வந்துள்ளது. […]
