ஆன்லைன் லுடோ விளையாட்டில் தொடர்ந்து தோற்ற கணவர் மனைவியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலர் திரைப்படம் பார்ப்பதும் ஆன்லைனில் கேம் விளையாடுவதுமாக பொழுதை போக்கி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த பெண் தனது கணவரிடம் பொழுதைப் போக்குவதற்கு கேம் விளையாடலாம் என யோசனை கூறியுள்ளார். அதன்படி கணவன் […]
