மயிலாடுதுறை காய்கறி கடையில் இருந்து 60 கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப் பணம் கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் […]
