குடிபோதையில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கோட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓர்க் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குடிக்கு அடிமையான இவர் தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதன்பின் மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் […]
