தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 4, 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பத்து ரூபாய் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராசிபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்வினை விஸ்வராஜு, […]
