மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்களுக்கு தர்ம ஆதி கொடுத்த உறவினர்கள். சென்னையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் விடுமுறை எடுத்து தனது ஊரான நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்றில் வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் மூன்று இளைஞர்களும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவருக்கு தஞ்சாவூர் எனவும் மற்றும் இருவருக்கு நாங்குநேரி அருகில் எனவும் தகவல் உள்ளது. 3 வாலிபர்களில் ஒருவர் அப்பெண்ணை காதலிப்பதாக வலை வீசியுள்ளார். […]
