எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் […]
