உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. […]
