தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]
