தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய […]
