வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொம்பேரி பட்டி காடையனிர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
