நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமி அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி அருகே சென்று கொண்டிருந்த போது சிவா மோட்டார் சைக்கிளில் அதிகமான ஒலி எழுப்பி மோதுவது […]
