உதவி செய்வது போல் முதியவர்களையும், கிராம மக்களையும் ஏமாற்றிய குற்றத்திற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலனூர் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும் கிராம மக்கள் மற்றும் முதியவர்களை கண்காணித்து வந்த சிலர் அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றியும், ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், பணத்தை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. […]
