தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை பகுதியில் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான வெங்கடேசளு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலபாறைமலையடியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் முதியவரின் துணிகள், செருப்பு இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]
