பிரதமர் திட்டத்தின் கீழ் மானியம் வாங்கி தருவதாக முதியவரின் வீட்டை அபகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் மசாக் கவுண்டர் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு சென்ட் இடத்தில் சொந்தமாக வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் திட்டத்தில் 2 லட்ச ரூபாய் மானியமாக பெற்றுக்கொள்ளலாம் என அதே பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய சார்லஸ் மற்றும் சுதா ஆகிய இருவரும் முதியவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டின் பத்திரத்தை தனது பெயரில் பவர் […]
