முதியவரை தாக்கிய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பெயிண்டரான முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராசு தனது வீட்டிற்கு கடப்பாக்கல் இறக்குவதற்காக முரளியை கூப்பிட்டுள்ளார். இந்நிலையில் தங்கராசு வெளியூரில் இருந்து பெயிண்டரை வரவழைத்து தனது வீட்டில் பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை வேலைக்கு கூப்பிடவில்லை என கோபமடைந்த முரளி தங்கராசுவின் வீட்டிற்கு சென்று அவரை […]
