காவல்நிலையத்தின் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெள்ளாந்தியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் 1992-ஆம் ஆண்டில் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை வேறொரு நபர் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது சம்பந்தமாக பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த நிலத்திலிருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலர் மண்ணைத் […]
