மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சின்னபாப்பா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகே இருக்கும் மரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் மூதாட்டி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். […]
