பாதயாத்திரையை பார்க்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்குறிச்சியில் புனித தேவசகாயம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மயங்கி சாலையில் விழுந்தார். […]
