மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு 60 மீட்டர் அகலம் மற்றும் 333 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலில் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது சென்னை துறைமுகத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். […]
