முறைகேடாக பயன்படுத்தினால் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், கேரட் அறுவடைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வாகனங்கள் என அனைவரும் அனுமதிச் சீட்டு பெற்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]
