உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சசிகுமார், மணிமேகலை, கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் மதக்கொண்டபள்ளியில் உள்ள அரசு பள்ளி முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில்1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் […]
