நெஞ்சு வலி அதிகமானதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் விபத்துக்குள்ளாகி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வள்ளி வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொல்லியல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ், ரகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வள்ளி வேலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரது மனைவி விஜயகுமாரியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். […]
