கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் வசிக்கும் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமித்து தனிநபர் சுவர் கட்டியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொள்ளாச்சி […]
