14 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]
