ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தில் யானைகள் மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
