இன்றைய தினம் : 2019 அக்டோபர் 04 கிரிகோரியன் ஆண்டு : 277_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 278_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 88 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது […]
