சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. […]
