போன் பயன்படுத்தியதற்கு தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் கோமதி தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். கோமதி வீட்டில் இருக்கும்போது வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய தாயான மாரிக்கண்ணு கோமதியை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் கோமதி எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை சிகிச்சைகாக குடும்பத்தினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]
