குழந்தை இறந்ததால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமார் ஆஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் ஆஷா மணலூர்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய கவியாழினி என்ற குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் […]
