நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]
