நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]
