இன்றைய தினம் : 2019 நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 331_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 332_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. […]
