விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக […]
