வீட்டு பூஜை அறைகள் அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம். தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். எழுந்ததும் பார்க்க வேண்டியவை: கோவில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை குழந்தைகள் நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். […]
