சரியாக பேசவில்லை என்ற கோபத்தில் உடன் படிக்கும் மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் அனுஷா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஷ்ணுவர்த்தன் ரெட்டி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென விஷ்ணுவிடம் அனுஷா பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு விஷ்ணு […]
