குடிபோதையில் வடமாநில தொழிலாளியை நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திகாம்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ராஜ் பகதூர் சிங் மற்றும் குமார் சிங் போன்றோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளனர். […]
