பெயிண்ட்டை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடலில் தீ பிடித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாப் பத்ரா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிப்லாப் பத்ரா எதிர்பாராத விதமாக பெயிண்ட்டை கீழே கொட்டி விட்டதால் அதன்மீது தின்னரை ஊற்றி சுத்தம் செய்யும் […]
