ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரக்கேஷ் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு தனது நண்பர்களுடன் சென்ற ரக்கேஷ் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் இணைந்து கோத்திகல் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த ரக்கேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]
