அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட் சோராய்க்வ்ராவின் தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் 1990ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அசாமில் அமைதி திரும்புவதற்கான […]
