மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். […]
