Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாநகரமானது சேலம்… சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்!!

சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது நாமக்கல்!!

கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கோவையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், நேற்று வரை 62 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 15 பேரும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை… பாதிக்கப்பட்ட 145 பேரும் டிஸ்சார்ஜ்!!

கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று குணமடைந்துள்ளார். கோவையில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்றுவரை பாதிக்கப்பட்ட 145 பேரில் 140 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மீதமுள்ள 5 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. அதேபோல மகே, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 14 நாட்களில் சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா […]

Categories

Tech |