ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் […]
