காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]
