அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்கள் மீது இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரியக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி […]
